வாழ்த்துரை
IJTLLS எனும் பன்னாட்டு தமிழ் இதழை இனிதே தொடங்கி நடத்துவதில் மிகவும் பெருமையடைகிறோம் . தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் தொன்மையினை வெளிக்கொணரும் வகையில் இவ்ஆய்விதழ் அமைந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்கள், பேராளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் ஆய்வை இயற்றி ஒப்புமை மற்றும் உயர்வு பெற இது ஓர் அரிய களமாகும். இது இப்பன்னாட்டு இதழின் முதல் வெளியீட்டின் முதல் தொகுதியாகும். என் பணி தமிழ் பணி செய்து கிடப்பதுவே என்பதற்கிணங்க ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராளர்களால் சிறந்த ஆய்வு இருமொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆய்வு கட்டுரைகளைக் கொண்டிருப்பதாகும். ஆய்வாளர்களின் அனைத்து கட்டுரைகளும் ஆய்வு நெறிமுறைகளின்படி தணிக்கைச் செய்யப்பட்டு மதிப்புரை வழங்கி செம்மைப்படுத்திப் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக அதன் தொன்மையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதே இவ்ஆய்விதழின் நோக்கமாகக் கொண்டாளப்பட்டுள்ளது. மேன்மேலும் இப்பன்னாட்டு இதழ்வளர்ச்சியடைய அனைவரின் சிறந்த ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
- பதிப்புக்குழு